ஜோன்ஸடன் பெர்னாண்டோ குற்றமற்றவர் என்பதை நீதி மன்றம் உறுதி செய்துள்ளது

நிதி மோசடிப்பிரிவையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக நிதி மோசடி பிரிவினால் தொடரப்பட்ட வழக்கு இன்று மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றமற்றவர் என்பது இன்று நீதி மன்றத்தில் நிரூபனமாகியுள்ளது.இன்று எமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறை மாத்திரமே.

இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பொலிஸாரையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பயன்படுத்தி எமக்கு எதிராக போலி ஊழல் குற்றசாட்டுகளை பதிவு செய்து அரசியல் ரீதியான பழிவாங்கள்களை முன்னெடுத்து வந்தது.

என்றாலும் எமக்கு இந்த நாட்டின் நீதித்துறையின் மீது மாத்திரமே நம்பிக்கை இருந்தது.நாம் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்த போதும் கடைசியில் நீதித் துறையினால் மாத்திரமே எமக்கு நியாயம் கிடைத்து. இனிமேலும் எம்மை திருடர்கள் என கூறுவதை இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த நல்லாட்சி  அரசு நிதி மோசடி பிரிவை பயன்படுத்தி பொய் சாட்சியங்களை உருவாக்கி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ செய்யாத ஒரு குற்றத்திற்காக இரு தடவைகள் அவரை சிறையில் அடைத்துள்ளது.இந்த செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டித்து வந்தோம்.நாம் இது விடயமாக கூறியது இன்று நீதிமன்றில் நிரூபனமாகியுள்ளது.

நிதி மோசடிப்பிரிவையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குழைந்துள்ளமைக்கு இதுவே காரணமாகும்.

பொலிஸாரை பயன்படுத்தி பிரதமர் தரப்பு ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிடும் அளவிற்கு இன்று விடயங்கள் இன்று கைமீறி சென்றுள்ளது.பல்வேறு மட்டங்களில் உள்ள அரசியல் தலையீடுகள் காரணமாக இன்று நாடு பல்வேறுபட்ட விடயங்களிலும் ஸ்தரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஜோன்ஸடன் பெர்னாண்டோ குற்றமற்றவர் என்பதை நீதி மன்றம் உறுதி செய்துள்ளது ஜோன்ஸடன் பெர்னாண்டோ குற்றமற்றவர் என்பதை நீதி மன்றம் உறுதி செய்துள்ளது Reviewed by Vanni Express News on 10/17/2018 05:34:00 PM Rating: 5