அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் - வெளியாகும் பரபரப்பான செய்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளதை அடுத்து கொழும்பு, விஜேராமயில் இருக்கும் அவரது வீட்டை சுற்றி மக்கள் அதிகளவில் குமிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாளை (27) அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெற்றியை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி ஏற்றதை அடுத்து மக்கள் பட்டாசுகளை வெடித்த கொண்டாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் - வெளியாகும் பரபரப்பான செய்தி அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் - வெளியாகும் பரபரப்பான செய்தி Reviewed by Vanni Express News on 10/26/2018 10:21:00 PM Rating: 5