ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் சிலர் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைவார்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவை, இராஜாங்க மற்றும் பிரதியமமைச்சர்கள் குழுவொன்று புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் பெருபான்மையை நிரூபிக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

இதனுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியும் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் அவரை சந்தித்த ஆனந்த சங்கரி புதிய பிரதமருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் சிலர் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைவார்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் சிலர் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைவார்கள் Reviewed by Vanni Express News on 10/27/2018 12:38:00 PM Rating: 5