மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை

பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

மொஹமட் நிசாம்தீன் எனும் 25 வயதுடைய இளைஞர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை Reviewed by Vanni Express News on 10/19/2018 11:50:00 PM Rating: 5