ஊழியர் நம்பிக்கை நிதிய பொறுப்பு சபை பிரதேச காரியாலயம் திறப்பு

திருகோணமலையில் ஊழியர் நம்பிக்கை நிதிய பொறுப்பு சபையின் பிரதேச காரியாலயம் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீரவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இது வரை காலமும் கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேச காரியாலயங்களுக்கு சென்று வர இங்குள்ள பயனாளிகள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கியமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் வழங்கப்படும் சகல சேவைகளும் இந்த அலுவலகத்தின் ஊடாக பெற்று கொள்ள முடியும். இன்று திறந்து வைக்கப்பட்ட இவ் அலுவலகத்தினால் வழங்கப்படும் பிரதிபலன்களை பெற்றுக் கொள்ள தனியார், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சுயதொழில் முயற்சியில் ஈடுபடுபவர்கள் அங்கத்துவத்தை பெற்ற கொள்வதன் ஊடாக உயரிய பிரதிபலன்களை பெறமுடியும் என்று இதன் போது அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், ஊழியர் நம்பிக்கை நிதிய பொறுப்பு சபை தலைவர், ஊழியர் நம்பிக்கை நிதிய பொறுப்பு சபை பொது முகாமையாளர் , திணைக்கள தலைவர்கள் , பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊழியர் நம்பிக்கை நிதிய பொறுப்பு சபை பிரதேச காரியாலயம் திறப்பு ஊழியர் நம்பிக்கை நிதிய பொறுப்பு சபை பிரதேச காரியாலயம் திறப்பு Reviewed by Vanni Express News on 10/05/2018 10:11:00 PM Rating: 5