உலகில் மிகவும் சுவையான அன்னாசி இலங்கையில்

உலகில் அன்னாசி செய்கை செய்யும் நாடுகளில் தற்போது மிகவும் சுவையான அன்னாசி சர்வதேச சந்தைக்கு இலங்கையில் இருந்தே வருகின்றது. 

இதன்காரணமாக எமது நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற அன்னாசி Sri Lanka Pineapple என்ற வார்த்தக நாமத்துடன், சர்வதேச சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆசேனை வழங்கியுள்ளார். 

இலங்கையின் காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கு அமைய அன்னாசியின் சுவை ஏனைய நாடுகளுக்கு இல்லாது போயுள்ளது. 

இதன்காரணமாக பல நாடுகளில் இருந்து இலங்கையின் அன்னாசிக்கு பாரிய கேள்வி இருந்து போதிலும் தேவையான அளவு செய்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக ஏற்றுமதியை இலக்காக கொண்டு மொனராகலை, மெல்லவத்தை பிரதேசத்தில் 75 ஏக்கர் நிலப்பரப்பில் அன்னாசி பயிர் வலயம் விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

எமது நாட்டில் மிகவும் சுவையான அன்னாசி மொனராகலை மாவட்டத்திலேயே பயிரிடப்படுகிறது.
உலகில் மிகவும் சுவையான அன்னாசி இலங்கையில் உலகில் மிகவும் சுவையான அன்னாசி இலங்கையில் Reviewed by Vanni Express News on 10/16/2018 04:06:00 PM Rating: 5