மழை வெள்ளம் - இவர்களும் மனிதர்கள்தானே இரக்கப்ப்ட மாட்டீர்களா ? உதவி செய்ய முன்வாருங்கள்

மழைக்காலத்தில் வீட்டிலிருந்து குளிர்காயும் நீங்கள் பாக்கியசாலிகள் என்பதால் தயவுசெய்து இதனை வாசிக்கவும்.

அன்பான நண்பர்களுக்கு,

மழைக்காலத்தில் நாமெல்லாம் வசிப்பதற்கும் வாழ்வதற்கும் பலருக்கு சொகுசு வீடுகள் இருக்கின்றன பலருக்கு ஏதோ ஓரளவு வாழக்கூடிய வீடுகள் இருக்கின்றன பலருக்கு ஏதோ மழை ஒழுக்குகள் அற்ற குடிசைகளும் இருக்கின்றன.

இதில் தற்போது பலரது வீடுகள் கடுமையான மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் உட்பட உதவிகளை பலரும் வழங்க முன்வந்தது சேகரித்துக் கொண்டு இருக்கின்றனர்.  நல்ல விடயம்

ஆனாலும் இவர்களெல்லாம் மழை முடிந்த பிறகு தமது சொந்த வீடுகளில் மகிழ்ச்சியாக வாழ முடியும் இழந்த சொத்துக்களை எல்லாம் மீட்டுக்கொள்ள முடியும்.

என்றாலும் வீடுகளின்றி சொந்தங்களின்றி அன்றாடம் ஏதோ தமது வயிற்றை நிரப்பிக் கொண்டு கிடைக்கும் இடங்களில் தூங்கிக் கொண்டு வாழும் வீதியோர மனிதர்களைப்பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறோமா? 

இவ்வாறான மனிதர்கள் மழைக்காலங்களில் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை கொண்டு செல்கின்றார்கள் என்று ஒரு நிமிடம் யோசித்து நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு நன்றி சொல்லி இருக்கின்றோமா?

கோடை காலங்களில் இவ்வாறான மனிதர்கள் கிடைக்கும் வேலையை செய்துகொண்டு கிடைக்கும் உணவுகளை உண்டு வீதிகளிலும் பொதுவிடங்களிலும் தூங்குகிறார்கள்.

என்றாலும் மழைக்காலங்களில் இவர்களது வாழ்க்கை ஒதுங்கும் இடங்களில் மழை சாரலும் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தங்களது உடல் மேல் உணரப்படும் குளிரை கட்டுப்படுத்திக்கொண்டும் ஏதேனும் ஒரு இடத்தில் கொட்டும் மழைக்குள் இரவு முழுவதும் விழித்து இருக்கும் வாழ்க்கை மிகக் கொடுமையானது.

இவ்வாறு நானோ அல்லது நீங்களோ ஒரு நாளேனும் வாழ்வோமா என்பதற்கான பதில் கேள்விக்குறியாகவே இருக்கும்.

இவ்வாறு வீதியோரங்களில் தங்களது வாழ்க்கையை கழித்து மழைக்காலங்களில் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருபவர்களுக்கு எந்த உதவிகளும் கிடைக்கப் பெறுவதில்லை

ஆனாலும் இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு இவர்களுக்கான உணவு உடை உறையுள் என்பவற்றை வழங்க நாம் படைத்தவர்களும் அல்ல அத்துடன் சாத்திய படுத்தவும் பல வருடங்கள் கடந்து செல்லும்.

என்றாலும் உங்களதும் எங்களதும் சக்திக்கேற்ப சில விடயங்களை சாத்தியப்படுத்த முடியும் நீங்கள் வாழும் வாழ்க்கைக்கும் நன்றி தெரிவிக்க முடியும்.

ஆம் நண்பர்களே.

மழைக்காலத்தில் இந்த மனிதர்கள் தலைக்கு மேல ஒரு கூரையை அமைத்துக் கொள்ள ஒரு குடையையும்(umbrella) தங்களது உடலில் மழைச்சாரல் படாமல் இருக்க ஒரு ரெயின் கோர்ட்(raincoat) என்பவற்றையும் வழங்கி உதவுங்கள்.

முடியுமான நண்பர்கள் இவ்வாறானவர்களை நேரில் சந்தித்து கொடுத்து உதவுங்கள் அதில் உங்களுக்கு மிகப்பெரிய ஆத்மதிருப்தி கிடைக்கும்.

அல்லது இந்த சமூகப் பணியை எதையும் எதிர்பாராமல் என்னால் இவ்வாறான மனிதர்களை இனம் கண்டு சரியாக செய்து முடிக்க முடியும்.

உங்களால் முடிந்தால் என்னை தொடர்பு கொண்டு குடை மற்றும் ரெயின் கோட் ஆகியவைகளை தந்து உதவுங்கள் கொடுப்பதை சரியாக கொண்டு சேர்க்கிறேன்.

அல்லது ஒரு குடையினுடைய விலை 720/= ரூபாயும் முழு உடலையும் மறைக்கக் கூடிய டிரெயின் கோர்ட் ஒன்றின் விலை1500/= ரூபாயும் ஆகும் இதனை பண உதவியாக வழங்கினாலும் நான் அதனைக் கொண்டு வாங்கிய பொருட்கள்  மற்றும் அது கொடுக்கப்பட்ட நபர், இடம், பற்றுச் சீட்டுக்கள்  உட்பட்ட புகைப்படங்கள் தேவை ஏற்படின் அனுப்பி வைக்கப்படும்.

நம்மால் அனைவருக்கும் உதவி செய்ய முடியாது ஆனாலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது சக்திக்கேற்ப ஒரு சிலருக்கு உதவி செய்ய முடியும்.

மேலதிக தகவல்களுக்கும் உறுதிப்படுத்தலுக்கும்...........
எஸ் எம் சர்ஜான் - 0774828281

அந்த ஒரு சிலரில் நான் முதல் நபருக்கான உதவியை வழங்குகின்றேன் அடுத்த நபருக்கான உதவி உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. கொடுப்பதை சரியாக கொண்டு சேர்க்கிறேன்.

உதவிகளுக்கு இனம் மதம் மொழி கிடையாது என்பதால் உதவி யாருக்கு செய்தாலும் அது உதவியாகவே சென்றடையும் அதற்கான கூலியும் உங்களுக்கு கிடைக்கும்.

உங்களால் உதவ முடியாவிட்டாலும் இந்த தகவலை உதவக்கூடிய உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து முகவரியற்ற அந்த மக்கள் வாழ்க்கைக்கு ஒளி கொடுக்க உதவுங்கள்.

*தகவல் பதிவு செய்யப்படும் திகதி(07.10.2018)

 நன்றி
மழை வெள்ளம் - இவர்களும் மனிதர்கள்தானே இரக்கப்ப்ட மாட்டீர்களா ? உதவி செய்ய முன்வாருங்கள் மழை வெள்ளம் - இவர்களும் மனிதர்கள்தானே இரக்கப்ப்ட மாட்டீர்களா ? உதவி செய்ய முன்வாருங்கள் Reviewed by Vanni Express News on 10/08/2018 01:59:00 PM Rating: 5