சீசெல்ஸ் குடியரசு நோக்கி பயணமானார் ஜனாதிபதி

3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீசெல்ஸ் குடியரசு நோக்கி இன்று (08) பயணமானார். 

இன்று (08) அதிகாலை 2.10 மணி அளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL 707 என்ற விமானத்திலேயே அவர் உட்பட குழுவினர் பயணம் செய்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இந்த விஜயத்தின் ​போது அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். 

இதேவேளை இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் விஷேட நிகழ்வொன்று இடம்பெற உள்ளது.
சீசெல்ஸ் குடியரசு நோக்கி பயணமானார் ஜனாதிபதி சீசெல்ஸ் குடியரசு நோக்கி பயணமானார் ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 10/08/2018 02:15:00 PM Rating: 5