பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்கவும் - ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீசெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு தொலைபேசியூடாக ஆலோசனை வழங்கியுள்ளார். 

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது ஒரு போதும் நிதி ஒதுக்கீட்டை ஒரு பிரச்சினையாக கருத வேண்டாம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். 

உலர் உணவுகள், குடிநீர் மற்றும் சுகாதார சேவை உள்ளிட்ட பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். 

அதேநேரம் வௌ்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் மீட்புப் பணிகளுக்காக முப்படையினரினதும் ஒத்துழைப்பை வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்கவும் - ஜனாதிபதி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்கவும் - ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 10/09/2018 03:07:00 PM Rating: 5