பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டது எவ்வாறு ?

பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலையில் ​சௌதியின் பங்கு குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மூத்த அமெரிக்க அதிகாரி சௌதி அரேபியாவின் முடியரசருடன் ரியாதில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்டீஃபன் முஷின், முகமத் பின் சல்மானை திங்களன்று சந்தித்தார். அக்டோபர் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்துக்கு சென்ற பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டார் என துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலில் கசோஜி தூதரகத்துக்கு வந்த நாளிலே திரும்பி சென்றுவிட்டார் என செளதி கூறி வந்தது பின் கடந்த வெள்ளி அன்று முதன்முறையாக கசோஜி இறந்துவிட்டார் என்றும் சண்டை ஒன்றில் அவர் கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் குறித்த அனைத்து உண்மையும் வெளியிடப்போவதாக துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் தெரிவித்தார்.

முஷினும் சல்மானும், செளதி - அமெரிக்க மூலோபாய கூட்டுத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து உறுதிப்படுத்தியதாக செளதி அரேபிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரியாதில் நடந்த இந்த சந்திப்பு குறித்து அமெரிக்கா இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டது எவ்வாறு ? பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டது எவ்வாறு ? Reviewed by Vanni Express News on 10/23/2018 11:36:00 PM Rating: 5