புத்தளத்தை குப்பைத்தொட்டியாக மாற்றாதீர்கள் - மாணவர்கள் வேண்டுகோள்

" புத்தளத்தை குப்பைத்தொட்டியாக மாற்றாதீர்கள், எங்கள் உரிமையில் கைவைக்காதீர்கள்"  சிறுவர் தினத்திலே புத்தளம் தொகுதி மாணவர்கள் வேண்டுகோள்!!!

கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள கழிவுகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் அரசுக்கு அழுத்தம் தெரிவித்தும் சுமார் மூன்று நாட்களாக புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்று வரும் சத்தியாகிரக போராட்டத்தில் இன்றைய தினம் புத்தளம் தொகுதி பாடசாலை மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.

"தமது எதிர்க்காலத்தை இந்த அரசு கேள்விக்குறியானதாக ஆக்கிவிடக்கூடாது" எனவும்  " புத்தளத்தை குப்பைத்தொட்டியாக மாற்றாதீர்கள், எங்கள் உரிமையில் கைவைக்காதீர்கள்"  எனவும் இன்றைய அரசிடம் சிறுவர் தினத்திலே புத்தளம் தொகுதி மாணவர்கள் வேண்டுகோள்..
புத்தளத்தை குப்பைத்தொட்டியாக மாற்றாதீர்கள் - மாணவர்கள் வேண்டுகோள் புத்தளத்தை குப்பைத்தொட்டியாக மாற்றாதீர்கள் - மாணவர்கள் வேண்டுகோள் Reviewed by Vanni Express News on 10/01/2018 11:00:00 PM Rating: 5