குப்பை திட்டத்தை எதிர்த்து புத்தளத்தில் அணிதிரண்ட மக்கள் - அதிர்ச்சியில் நல்லாட்சி

-வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் விசேட செய்திக்குழு

புத்தளத்தை நாட்டின் குப்பை தொட்டியாக மாற்றும் முயற்சிக்கு எதிராக, புத்தளத்தில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த சத்தியாக கிரக போராட்டம் இன்று October 12, 2018 மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கபட்டுள்ளது.

புத்தளம் அறுவாக்காட்டில் கொட்டப்படவுள்ள கொழும்பு குப்பைக்கு எதிராக, புத்தளத்தில் 13 நாட்களாக தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் 14 வது நாளான இன்று , சர்வமத பிரார்த்தனை நிகழ்வும் ஆர்ப்பாட்ட பேரணியும் இடம்பெற்றது.

புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த விஷேட மேடையில் இருந்தவாறு சர்வமத தலைவர்களின் உரைகளும், பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் பிரதான சுற்று வட்டத்துக்கு வருகை தந்து அங்கிருந்து, குருநாகல் வீதி வழியாக புத்தளம் மாவட்ட செயலகத்தை அடைந்து புத்தளம் மாவட்ட சர்வமத ஒன்றிய தலைவர்களால் புத்தளம் மாவட்ட செயலாளரிடம் நான்கு பக்கங்களை கொண்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

நாட்டின் பல பாகங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
குப்பை திட்டத்தை எதிர்த்து புத்தளத்தில் அணிதிரண்ட மக்கள் - அதிர்ச்சியில் நல்லாட்சி குப்பை திட்டத்தை எதிர்த்து புத்தளத்தில் அணிதிரண்ட மக்கள் - அதிர்ச்சியில் நல்லாட்சி Reviewed by Vanni Express News on 10/12/2018 11:29:00 PM Rating: 5