புத்தளத்தில் கொட்டும் மழையிலும் பெண்களின் மாபெரும் ஆர்பாட்டம்

-அனீன் மஹ்மூத்

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காலு, சேராக்குளி பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிராக புத்தளம் கொழும்பு முகத்திடலில் ​நேற்று (26-10-2018) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று பெண்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

#CleanPuttalam மகளிர் அணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்டத்தில் இன மத வேறுபாடின்றி சிறுவர், சிறுமிகள், யுவதிகள் என அனைத்து பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.

புத்தளம், கரைதீவு, சேராக்குளி, தில்லையடி, பாலாவி, கல்பிட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மூவின மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்று இறுதியில் புத்தளம் பிரதேச செயலகம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, மகளிர் விவகார பிரிவு என்பவற்றில் குப்பை திட்டத்திற்கு எதிரான பெண்களின் எதிர்ப்பாக தமது மகஜரினைக் கையளித்தனர்.

ஆர்பாட்டத்தின் போது கடுமையான மழை பெய்த நிலையிலும் மழையினையும் பொருட்படுத்தாது பெண்கள் தமது ஆர்பாட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.

இல்லத்தரசிகள், மூத்தோர்களுடன் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட துறைசார் பெண்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
புத்தளத்தில் கொட்டும் மழையிலும் பெண்களின் மாபெரும் ஆர்பாட்டம் புத்தளத்தில் கொட்டும் மழையிலும் பெண்களின் மாபெரும் ஆர்பாட்டம் Reviewed by Vanni Express News on 10/27/2018 11:50:00 PM Rating: 5