எத்தனை தடைகள் வந்தாலும் பிள்ளைகளை படிக்க வையுங்கள்

-க.கிஷாந்தன்

உங்களுக்கு எத்தனை துன்பங்கள், துயரங்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவுகள் ஏற்பட்டாலும் பிள்ளைகளின் கல்விக்கு தடையாக இருக்காமல் அவர்களுக்கு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படுங்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்திலும், நோனா தோட்டம் மேல் பிரிவிலும் அமைக்கப்பட்ட 40 வீடுகள் (07.10.2018) மக்களிடம் கையளிக்கப்பட்டன. இதனை மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், சோ.ஸ்ரீதரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர்,

நான் இலங்கை தொழிலாளர் காங்கிரசை விட்டு வெளியே வருகின்ற பொழுது என்னுடைய அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக பலரும் கூறினார்கள். ஆனால் நான் மக்களுடன் இருந்த காரணத்தால் அவர்கள் என்னை கைவிடவில்லை. நான் அதற்கு பின்பு தற்பொழுது கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற பதவிக்கு உயர்ந்திருக்கின்றேன்.

மத்திய மாகாண சபையின் ஆட்சி காலம் நிறைவிற்கு வருகின்றது. எங்களை கடந்த காலங்களில் மத்திய மாகாண சபையில் வேலை செய்ய விடாமல் சில முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆனால் இனிமேல் நாங்கள் நேரடியாக சென்று வேலை செய்யக்கூடிய நிலைமை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.கடந்த காலங்களில் அவர்கள் வேலை செய்யவூமில்லை எங்களை வேலை செய்ய விடவுமில்லை. இது எங்களுடைய கல்விக்கு ஒரு பெரும் பி;ன்னடைவாகும்.

நாங்கள் கல்வி அமைச்சில் இருந்து நிதி வழங்கி மத்திய மாகாணத்தில் அபிவிருத்தி செய்த பல பாடசாலைகளை எங்களுக்கு தெரியாமல் வேறு சிலர் திறப்ப விழா செய்கின்றார்கள். ஆனால் இனிவரும் காலங்களில் நாங்கள் இந்த பகுதியில் இருக்கின்ற பாடசாலைகளில் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கின்றறௌம்.

புpள்ளைகளை நீங்கள் நன்றாக படிக்க வைத்தால் மாத்திரமே அது உங்களுக்கு ஒரு நிரந்தர சொத்தாக அமையும். தயவு செய்து மாணவர்களை இடைநடுவில் பாடசாலையை விட்டு விலக்கி தொழிலுக்காக அனுப்பி விடாதீர்கள்.

இன்று தோட்டத்தில் பிறந்து வளர்ந்த எங்களுடைய பிள்ளைகள் டாக்டர்களாக பொறியியலாளர்களாக பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகின்றார்கள்.இது தான் எங்களுடைய முன்னேற்றம். இந்த முன்னேற்றத்தைதான நான் எதிர்பார்க்கின்றேன்.இதற்கான உங்களை அர்ப்பணித்து செயற்படுங்கள்.

நான் என்றுமே பிறந்து வளர்ந்த இடத்தை மறப்பவன் அல்ல. நான் எந்தளவு உயர்ந்த இடத்திற்கு சென்றாலும். இந்த இடத்தை மறக்க மாட்டேன். அதே போல எங்களுடைய தாய் நாடு அதே போல எங்களுடைய தாய் தோட்டம் இப்படி வாழ்ந்த வாழ்க்கை பழகிய மக்கள் இது எதையுமே மறக்க முடியாது.அப்படி மறந்தவர்கள் யாரும் தங்களுடைய வாழ்வில் முன்னேற்றமடைய முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எத்தனை தடைகள் வந்தாலும் பிள்ளைகளை படிக்க வையுங்கள் எத்தனை தடைகள் வந்தாலும் பிள்ளைகளை படிக்க வையுங்கள் Reviewed by Vanni Express News on 10/08/2018 12:56:00 PM Rating: 5