அதிரும் அரசியல் நாட்டின் பிரதமர் நான்தான் - ரணில்

தான், நகரமயமாக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்தவரென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிராமிய மயப்பட்ட பொலன்னறுவையைச் சேர்ந்தவரென்றும் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதுவே தாம் இருவரிடையே காணப்பட்ட கலாசார மாற்றமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்று (28) உரையாற்றியிருந்த ஜனாதிபதி, தனக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், அரசியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் கூட வேறுபாடுகள் காணப்படுவதாகக் கூறியிருந்தார்.

இது தொடர்பில், இன்று சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய ரணிலிடம், அந்த ஊடகவியலாளர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது மேற்கண்டவாறு கூறியுள்ள அவர், மேற்கண்ட வேறுபாட்டைத் தவிர, தனக்குத் தெரிந்த வேறு ஏதும் வேறுபாடுகள் கிடையாதென்றும் நாட்டின் பிரதமர் தொடர்ந்தும் தானென்றும் கூறியுள்ளார்.
அதிரும் அரசியல் நாட்டின் பிரதமர் நான்தான் - ரணில் அதிரும் அரசியல் நாட்டின் பிரதமர் நான்தான் - ரணில் Reviewed by Vanni Express News on 10/29/2018 03:39:00 PM Rating: 5