பிரதமர் நானே - ஜனாதிபதியை அதிரவைக்கும் ரணிலின் பதில் கடிதம்

அரசியலமைப்பு ரீதியாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் தாமே எனவும் அப்பதவியில் தாம் தொடர்ந்தும் நீடிப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

தமக்குள்ள அதிகாரத்திற்கு அமைவாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னதாக அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகப்பூர்வக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

அரசியல் அமைப்பின் 42(4) பிரிவின் கீழ் தமக்குரிய நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அதில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதியின் கடிதத்திற்கு ரணில் விக்ரமசிங்க இந்த பதில் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

Image may contain: text
பிரதமர் நானே - ஜனாதிபதியை அதிரவைக்கும் ரணிலின் பதில் கடிதம் பிரதமர் நானே - ஜனாதிபதியை அதிரவைக்கும் ரணிலின் பதில் கடிதம் Reviewed by Vanni Express News on 10/26/2018 11:52:00 PM Rating: 5