செட்டிக்குளம் பிரதேச செயலகம் நடாத்தும் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு

-எம் என் எம் பர்விஸ்

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகம் மற்றும் முதியோர் சங்கம் இணைந்து நடாத்தும் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வு இன்று(20) செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது விசேட அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியுதீன் கொண்டார்.

இதன் போது கல்வி, கலை போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும், முதியோர்களை கௌரவித்து அன்பளிப்புகளும் வழங்கி வைத்தார்.

பிரதேச செயலாளர் ஶ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ எம் ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், வட மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் வனஜா செல்வரத்னம், முதியோர் சங்கத் தலைவர் நஜிமுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மது உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 
செட்டிக்குளம் பிரதேச செயலகம் நடாத்தும் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு செட்டிக்குளம் பிரதேச செயலகம் நடாத்தும் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு Reviewed by Vanni Express News on 10/20/2018 11:36:00 PM Rating: 5