அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் வாழைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

-நஜிமுடீன் எம்.ஹஷான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட சில இடங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில் மற்றும்வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் பலஅபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கடந்தஞாயிற்றுக்கிழமை(30-09-2018) கல்குடா தேர்தல் தொகுதிக்குட்பட்ட வாழைச்சேனை பிரதேசத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அம்மக்களின் நன்மை கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய மக்கள் பணிமனை கிளைக்காரியாலயத்தை வாழைச்சேனையில்திறந்து வைத்ததுடன்,அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாடுகளுக்கு தகுந்த தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில்,பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வாழைச்சேனை(ஐந்தாம் வட்டாரத்தில்)பலநோக்குக்கூட்டுறவுச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது.அத்துடன்மாவடிச்சேனை செம்மண்ணோடையில் நீண்டகாலமாக தரக்குறைவாய் காணப்பட்ட பாதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,புதிய கொங்ரீட் பாதைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றன.

குறிப்பிட்ட இந்நிகழ்வுகள் கல்குடா தேர்தல் தொகுதியின் அகில இலங்கைமக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமானஎம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் வழிநடத்தலின் பேரிலேயே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் வாழைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் வாழைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம் Reviewed by Vanni Express News on 10/03/2018 04:56:00 PM Rating: 5