haiiii

உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்

-ஊடகப்பிரிவு

உலக உணவுத் திட்டத்தின்(World Food Programme)“உலக பட்டினி ஒழிப்பு”தொடக்க முயற்சிகளுக்கு தனது அமைச்சின் கீழான,அதனுடன் தொடர்புபட்ட அத்தனைநிறுவனங்களும்பூரணபங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சர் ரிஷாட் பதியுதீன்உறுதியளித்தார்.

உலக உணவுத் திட்டத்தின் வதிவிடப்பிரதிநிதிபிரெண்டா பார்டன்(Ms.Brenda Barton),அமைச்சர் ரிஷாட் பதியுதீனை,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில்நேற்று (18) சந்தித்தபோதே,அமைச்சர்இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, உலக உணவுத் திட்டத்தின்இலங்கைக்கானஅரசபங்குதார அதிகாரி முஸ்தபா நிஹ்மத்தும் பங்கேற்றிருந்தார்.

போஷாக்கின்மையை இல்லாமலாக்குதல், இலங்கையர்களின் வாழ்க்கை முறையில் புகுத்தப்பட்டிருக்கும் குறைந்த ஊட்டச்சத்துள்ள உடன் உணவுகளுக்கு(Fast-food) பதிலாக, ஊட்டச்சத்துள்ள உணவுப் பாவனையை ஊக்குவித்தல் என்பவற்றை முன்னெடுக்கும் உலக உணவுத் திட்டத்தின் செயற்பாடுகளுக்கு, அமைச்சரின் வலுவான உதவிகளையும்வதிவிடப் பிரதிநிதிபிரெண்டா பார்டன்கோரினார்.

உலகவிவசாய அமைப்பு(Food Agriculture Organization)கடந்த 16ஆம் திகதி பண்டாரநாயக்கசர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக உணவு தினத்தில்(World Food Day) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை தொட்டுக்காட்டிய வதிவிடப் பிரதிநிதி,“உணவின் காரணமாக ஏற்படும் தேகாரோக்கியபாதிப்புகள், இலங்கையின் சனத்தொகையில்32% சதவீதமானோரே ஆட்கொண்டுள்ளதாக ஜனாதிபதிசுட்டிக்காட்டியதையும், நிரந்த வதிவிடப்பிரதிநிதி,இந்த சந்திப்பில் ஞாபகப்படுத்தினார்.

அத்துடன்,2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக வங்கியின் கருத்துப்படி, விவசாய உற்பத்திகள் மூலம் இலங்கையானது, உணவுப் பாதுகாப்பில் வெற்றிகரமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது எனவும் ஆனால், போஷாக்கின்மையே பாரிய பிரச்சினையாகஉருவெடுத்திருப்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

இந்தப் பின்னணியில் இலங்கையானது, இரண்டு வழிகளை முன்னெடுக்கக் உலக உணவுத் திட்டம் உதவும். அந்தவகையில்,உள்நாட்டில் உற்பத்தி செய்யும் அரிசியின் மூலம் உணவுப் போஷாக்கை பலப்படுத்துவதற்கும் அதனை வலுப்படுத்துவதற்கும் உதவியளிப்பதோடு, அவசரமாகபயன்படுத்தும்(Emergency Food) உணவுப் பொருட்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உதவியளிக்கும்.முதலாவது தெரிவிலே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சானது, உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து பெரும்பங்களிப்பை நல்க முடியும். அடுத்த தெரிவிலே, அமைச்சுக்கு கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, நெடா மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,ஊட்டச்சத்துமிக்க, தரமான உணவுகளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த முடியும்எனஅவர் மேலும்தெரிவித்தார்.

கடந்த 10 வருடங்களாக இலங்கையில் ஊட்டச்சத்தின்மைக் குறைபாட்டு வீதம் மாற்றமடைந்து வருவதற்குதீவிரகரிசனையே காரணமாக இருக்கின்றது. அத்துடன்45% பெண்கள்கர்ப்பகாலத்தில்உடல் பருமனடைகின்றனர். இவர்களுக்கும்விழிப்புணர்வுகளை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது.இவைகுறித்து, உணவுத் துறையுடன் தொடர்புடைய இலங்கை கம்பனிகளுடன் நாம் பேச்சு நடாத்தியுள்ளோம். இந்த விடயங்களில் அமைச்சும் தலையீடு செய்து,அவர்களின்உணவுத்தயாரிப்புக்களின் மூலம் நிறையுணவை வழங்குவதிலும், அதனை ஊக்கப்படுத்துவதிலும்அக்கறை காட்ட வேண்டும்என்றும்வதிவிடப் பிரதிநிதிபிரெண்டாபார்டன் தெரிவித்தார்.

உலக உணவுத் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியின் இந்த ஒருங்கிணைந்த செயற்பாட்டை வரவேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கருத்து தெரிவித்த போது,

“இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையாளர்களின் பங்களிப்பு 52% சதவீதநேரடி பங்களிப்பையும் மேற்பார்வையையும் நல்குகின்றது. சிறியமற்றும் நடுத்தர முயற்சியாண்மையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில், உணவு மற்றும் குடிபானத் துறைகள் பங்குவகிக்கின்றன.

மேலும்,உணவுப் பாதுகாப்பு சங்கிலித் தொடரை பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் அமைச்சு பல திட்டங்களைமுன்னெடுத்து வருகின்றது. சர்வதேச தரச்சான்றிதழ்மற்றும் இதர உணவுப் பாதுகாப்புத் தொடர்பான சான்றிதழ்கள் மூலம் உணவின் தரத்தை பேணுவதற்கு அது மேலும் உதவியளிக்கின்றது.

அத்துடன்,எமதுஅமைச்சின் மூலம்,உணவுத்தரத்துடன் தொடர்புடைய பல்வேறு ஆலோசனைக் குழுக்கள் நிறுவப்பட்டு,உணவைப் பேணல், உணவின் தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது தொடர்பிலான ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து,நெருக்கமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்”இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்
உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்
https://2.bp.blogspot.com/-DDVPiCvZ3Zo/W8oiEaY6_SI/AAAAAAABQaU/rLu56Alee1I1kf28PU-UTRockWWX3b2gwCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://2.bp.blogspot.com/-DDVPiCvZ3Zo/W8oiEaY6_SI/AAAAAAABQaU/rLu56Alee1I1kf28PU-UTRockWWX3b2gwCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/10/rb_89.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/10/rb_89.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy