விமான நிலைய தொழுகை அறையைப் பயன்படுத்துமாறு முஸ்லிம் அமைப்புக்கள் வேண்டுகோள்

-ஐ. ஏ. காதிர் கான் 

கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறையை, சமயக் கிரியைகளுக்காகப் பாவிக்குமாறு, வெளிநாடு செல்ல அங்கு வரும் அனைத்து முஸ்லிம்களிடமும், இலங்கையிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. 

அந்த வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கட்டுநாயக்க விமான நிலையத்தில், வெளிநாடு செல்ல வரும் முஸ்லிம்களுக்கென தொழுகை அறையொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழுகை அறையை, விமான நிலையத்தில் தறித்துச் செல்லும் முஸ்லிம்கள் பாவிக்காமல் விட்டுவிடுவதாக, பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக, முஸ்லிம் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

குறித்த இந்தத் தொழுகை அறையை, தொழுகைக்காகப் பாவிக்காது விடுகின்ற பட்சத்தில், விமான நிலைய நிர்வாகம் இந்த அறையை வேறு தேவைகளுக்காக எடுக்கும் வாய்ப்பு அல்லது பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளதாகவும், முஸ்லிம் அமைப்புக்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளன.

எனவே, வெளிநாடு செல்வதற்காக இங்கு தறித்துச் செல்லும் முஸ்லிம் சகோதர சகோதரிகள், தமக்குக் கிடைத்துள்ள இச்சலுகையைப் பாதுகாத்து, விமான நிலையத் தொழுகை அறையில், ஐவேளைத் தொழுகை நேரங்களில் தொழுது கொள்ளுமாறும் அல்லது தொழுகை அல்லாத நேரங்களில் குறைந்த பட்சம் பத்து நிமிடங்களேனும் குறித்த அறையில் தாமதித்து, "துஆ" செய்து பிரயாணத்தை மேற்கொள்ளுமாறும், அந்த அமைப்புக்கள் மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளன.
விமான நிலைய தொழுகை அறையைப் பயன்படுத்துமாறு முஸ்லிம் அமைப்புக்கள் வேண்டுகோள் விமான நிலைய தொழுகை அறையைப் பயன்படுத்துமாறு முஸ்லிம் அமைப்புக்கள் வேண்டுகோள் Reviewed by Vanni Express News on 10/15/2018 02:35:00 PM Rating: 5