பழிவாங்கும் விதத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை

ஊருகஸ்மண் ஹந்திய, ரத்தொட்டுவில பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

27 மற்றும் 37 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று (30) இரவு இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கியால் சுட்டு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பழிவாங்கும் விதத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை பழிவாங்கும் விதத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை Reviewed by Vanni Express News on 10/01/2018 03:03:00 PM Rating: 5