மகனைத் தாக்க வந்தவர்களை தடுக்க முற்பட்ட தாய் அடித்துக் கொலை - கொடூரச் சம்பவம்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரெழு, மேற்கு சரஸ்வதி சன சமூக நிலைய பகுதியில் மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை சிலர் பொல்லு மற்றும் கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர். 

நேற்று இரவு 08 மணியளவில் இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வீட்டுக்குள் புகுந்த 08 பேர்கள் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்திர ராசா விஐயகுமாரி எனும் 58 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்த பெண்ணின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
மகனைத் தாக்க வந்தவர்களை தடுக்க முற்பட்ட தாய் அடித்துக் கொலை - கொடூரச் சம்பவம் மகனைத் தாக்க வந்தவர்களை தடுக்க முற்பட்ட தாய் அடித்துக் கொலை - கொடூரச் சம்பவம் Reviewed by Vanni Express News on 10/15/2018 03:04:00 PM Rating: 5