தாயினால் சூடு வைக்கப்பட்ட 11 வயதுடைய சிறுமி வைத்தியசாலையில் சோக சம்பவம்


பெற்று வளர்த்த பிள்ளைக்கு தாய் ஒருவர் சூடுவைத்து வந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த தாயால் இரும்புக்கம்பியை சூடாக்கி 11 வயதுடைய சுதாகரன் மேனகா என்னும் சிறுமிக்கு சூடு வைக்கப்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எருவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றுவரும் குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்றபோது காயங்களை அவதானித்த பாடசாலை ஆசிரியர்கள் குறித்த சிறுமியை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

குறித்த சிறுமியின் இரண்டு கைப்பகுதியிலும் வாய்ப்பகுதியில் சூடு வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார். 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு என்பனவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
தாயினால் சூடு வைக்கப்பட்ட 11 வயதுடைய சிறுமி வைத்தியசாலையில் சோக சம்பவம் தாயினால் சூடு வைக்கப்பட்ட 11 வயதுடைய சிறுமி வைத்தியசாலையில் சோக சம்பவம் Reviewed by Vanni Express News on 10/05/2018 03:51:00 PM Rating: 5