தாய், மகள் மீது பாலியல் வன்புணர்வு - 7 பொலிஸார் மீது வழக்கு
அரியானா மாநிலம், கைதால் மாவட்டத்தில் உள்ள சர்பஞ் எனும் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை 7 பொலிஸார் உட்பட 18 பேர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமி புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி (16) பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 பொலிஸ் அதிகாரிகள் கடந்த மாதம், தாயை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், அவரது மகளையும் சீரழித்துள்ளனர். பின்னர் இன்னும் 9 பேர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர் என சிறுமியின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் அரியானா மாநிலத்தில், சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தாயையும் மகளையும் பொலிஸ் அதிகாரிகளே வன்புணர்வு செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Reviewed by Vanni Express News
on
10/05/2018 10:03:00 PM
Rating: