வௌ்ளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்பு

வலல்லாவிட்ட, ஒருகொட பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் ஒருவரின் சடலம் நேற்று (08) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வலல்லாவிட்ட பகுதியை சேர்ந்த 59 வயதுடைய தீமிகா எனும் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வலல்லாவிட்ட, ஒருகொட பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட மூன்று பெண்களில் இருவரை பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து காப்பாற்றி இருந்தனர். 

நேற்றுமுன்தினம் வௌ்ள நீர் அதிகமாக காணப்பட்டதன் காரணமாக குறித்த பெண்ணை தேடுவது கஷ்டமாக இருந்ததுடன் கடற்படையின் சுழியோடிகள் வரவலைக்கபட்டு நேற்று காலை 9 மணியளவில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌ்ளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்பு வௌ்ளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்பு Reviewed by Vanni Express News on 10/09/2018 12:31:00 AM Rating: 5