இரண்டாயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் - அமைச்சர் சஜித்

அடுத்த வருட இறுதிப் பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

நாட்டிலுள்ள 25 இலட்சம் வறிய மக்களின் வீடமைப்புத் தேவையைத் தீர்க்கும் வகையில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

மட்டக்களப்பு - கோரளைப்பற்று, மீராவோடை சுவாமி விபுலானந்தர் கோட்டம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 130 ஆவது எழுச்சிக் கிராமத்தை திறந்து வைத்ததன் பின்னர் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இங்கு 30 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 27 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இரண்டாயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் - அமைச்சர் சஜித் இரண்டாயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் - அமைச்சர் சஜித் Reviewed by Vanni Express News on 10/01/2018 11:42:00 PM Rating: 5