மஹிந்தவின் உயிரை காப்பாற்றிய பிரதமர் ரணில் இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும்

யுத்த குற்றங்களுக்காக இருக்கும் ரோம் சாசனத்தில் 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பிரதமர் கையொப்பம் இடாத காரணத்தால் எந்தவொரு இலங்கை குடிமகனையும் வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கோ அல்லது இராணுவ நீதிமன்றங்களுக்கோ அழைத்துச் செல்ல முடியாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி, கஹவத்த பகுதியில் 29 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசாங்கம் புத்த சாசனத்தை அழித்து தேரர்களை கைது செய்து வெளிநாட்டு நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிலர் பொய் பிரச்சாரங்களை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

2015 ஆம் ஆண்டு தான் தேர்தலில் தோல்வியடைந்தால் தன்னை மின்சார கதிரைகளுக்கு அழைத்துச் செல்வதாக மஹிந்த ராஜபக்ஷ பொய் பிரச்சாரம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் அவர் தெரிவித்தது போன்று எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷ தினமும் காலை எழுந்ததும் அவரது உயிரை காப்பாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் உயிரை காப்பாற்றிய பிரதமர் ரணில் இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும் மஹிந்தவின் உயிரை காப்பாற்றிய பிரதமர் ரணில் இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும் Reviewed by Vanni Express News on 10/01/2018 10:50:00 PM Rating: 5