கடைகளில் கைவரிசையைக் காட்டிய சிறுவர்கள்

கந்தளாய் பகுதியில் உள்ள தனியார் கடைகளில் சிறுவர்கள் இருவர் திருடும் காட்சி அருகில் இருந்து சீ.சீ.ரி.வி கெமராக்களில் பதிவாகியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சிறுவர்களினால் கடையில் இருந்து 2500 ரூபா பணமும் சில பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கடைகளில் கைவரிசையைக் காட்டிய சிறுவர்கள் கடைகளில் கைவரிசையைக் காட்டிய சிறுவர்கள் Reviewed by Vanni Express News on 10/16/2018 03:18:00 PM Rating: 5