ஞானசார தேரரை விடுவிப்பதற்காக ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பொதுல சேனா அமைப்பு

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்காக மிக விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக பொதுல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் உறுப்பினர் சிங்கள ராவைய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான இறுதி மேன்முறையீடும் நேற்றைய தினம் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையை விலக்கிக்கொள்ளுமாறு கோரி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனு நேற்று உயர்நீதிமன்றில் மூன்று நீதியர்சர்களைக் கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பெரும்பான்மை தீர்மானத்தின் அடிப்படையில் அந்த மனு நிராகரிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஞானசார தேரரை விடுவிப்பதற்காக ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பொதுல சேனா அமைப்பு ஞானசார தேரரை விடுவிப்பதற்காக ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பொதுல சேனா அமைப்பு Reviewed by Vanni Express News on 10/06/2018 11:45:00 AM Rating: 5