கபீர் ஹசீம் மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோரின் அதிரடி ஆட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் மற்றும் கட்சியின் பொது செயலாளாரான பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரினால் கையொப்பம் இடப்பட்ட கடிதம் ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமையை பாதுகாப்பது தொடர்பில் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் விளைவாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அரசியல் நெருக்கடி நிலையில், அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் உரிமைகளை பாதுகாப்பது அத்தியாவசிய கடமை என சபாநாயகர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சரவையின் அங்கத்தவர்கள் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த அனைத்து அமைச்சர்களும் பங்குகொண்டிருந்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் 
பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினமும் அலரிமாளிகையில் சந்திப்பொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கபீர் ஹசீம் மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோரின் அதிரடி ஆட்டம் கபீர் ஹசீம் மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோரின் அதிரடி ஆட்டம் Reviewed by Vanni Express News on 10/28/2018 04:05:00 PM Rating: 5