மரக்கறி வகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

-ஐ. ஏ. காதிர் கான் 

மரக்கறி வகைகளின் விலைகள், மீண்டும் அதிகரித்துள்ளது. நாட்டில் நிலவிய மழையுடன் கூடிய காலநிலையினால், அறுவடைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சுமார் 60 வீத மரக்கறி வகைகள் மழையினால் அழிவடைந்துள்ளதாகவும், நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் மரக்கறி வகைகளின் விலைகள், மேலும் அதிகரிக்கக்கூடும் என, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மேலும் கூறியுள்ளது.

தக்காளி, கறி மிளகாய், லீக்ஸ் உள்ளிட்ட சில மரக்கறி வகைகளின் விலைகளிலேயே, அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரக்கறி வகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு மரக்கறி வகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு Reviewed by Vanni Express News on 10/16/2018 03:56:00 PM Rating: 5