வசிம் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் - வௌியாகியுள்ள முக்கிய செய்தி

வசிம் தாஜூதீனின் கொலை சம்பவத்தின் வழக்கு பொருளாக, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் 'சிரிலிய சவிய' செயற்திட்டத்திற்காக வழங்கிய wp ka 0642 என்ற டிப்பன்டர் ரக வாகனம் உள்வாங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட வசிம் தாஜூதீனை கடத்துவதற்காக இந்த டிப்பென்டர் ரக வாகனம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் நிலவுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுச் சென்றது.

இதன் காரமணமாக குறித்த வாகனத்தை வழக்கு பொருளாக பெயரிடுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்தை கோரியிருந்தது.

அதன்படி, அந்த வாகனத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் மூன்றாம் இலக்க நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளப்படும் வழக்கு ஒன்றின் வழக்கு பொருளாக ஆவணப்படுத்துமாறு நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வசிம் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் - வௌியாகியுள்ள முக்கிய செய்தி வசிம் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் - வௌியாகியுள்ள முக்கிய செய்தி Reviewed by Vanni Express News on 10/04/2018 11:25:00 PM Rating: 5