பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு

மகாவலி நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் மழை வீழ்ச்சி அதிகரித்திருப்பதாக மகாவலி பணிப்பாளர் நாயகம் சரச் சந்திர விதான தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக, பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை மின்சார உற்பத்திக்கான 6 நீரத்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

இவற்றின் நீர் மட்டம் 70 சதவீதம் தொடக்கம் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது. நீர் மூலமான மின்சார உற்பத்தி 30 வீதத்திற்கும் 35 வீதத்திற்கும் இடைப்பட்ட மட்டத்தில் காணப்படுகிறது. 
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு Reviewed by Vanni Express News on 10/01/2018 03:08:00 PM Rating: 5