இன்று அதிகாலை நாராஹேன்பிட்டியில் வீதி தாழிறங்கியது

நாராஹேன்பிட்டி, கிருல வீதியில் சித்ரா ஒழுங்கை சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை 05.00 மணியளவில் குறித்த வீதி தாழிறங்கியுள்ளதுடன், இதனால் அந்த வீதியில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக பொரள்ளை, ராஜகிரிய மற்றும் கொட்டா வீதி ஆகிய பிரதேசங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை நாராஹேன்பிட்டியில் வீதி தாழிறங்கியது இன்று அதிகாலை நாராஹேன்பிட்டியில் வீதி தாழிறங்கியது Reviewed by Vanni Express News on 10/10/2018 11:48:00 AM Rating: 5