நாடு முழுவதும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

நாடு முழுவதும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நாளையிலிருந்து சற்று அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது 

மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

நாடு முழுவதும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை நாடு முழுவதும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை Reviewed by Vanni Express News on 10/16/2018 02:20:00 PM Rating: 5