மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

வடமேல், வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மேல் மாகாணத்தின் உள்ளகப் பகுதிகளிலும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 
மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் Reviewed by Vanni Express News on 10/05/2018 02:59:00 PM Rating: 5