நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை

நாட்டில் இடைக்கால பருவப்பெயர்ச்சி நிலை உருவாகியுள்ளது. 

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களில் 150 மி.மீ அளவான மிகவும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மற்றும் புத்தளத்திலிருந்து நீர்கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-20 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். 
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை Reviewed by Vanni Express News on 10/03/2018 10:29:00 AM Rating: 5