காலி மாவட்டத்தில் ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

காலி மாவட்டத்தில் ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் கங்கையின் தாழ்நில பிரதேசத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக ஜின் கங்கைக்கு பொறுப்பான நீர்பாசன பொறியிலாளர் திருமதி சாமிலா வீரக்கொடி தெரிவித்தார். 

இன்று காலை 9 மணியளவில் பத்தேகம ஹிரிகஸ்கெட்டிய ஜின் கங்கையின் நீர் மட்டம் 4.7 ஆக பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலி மாவட்டத்தில் ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு காலி மாவட்டத்தில் ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு Reviewed by Vanni Express News on 10/08/2018 05:40:00 PM Rating: 5