சீரற்ற காலநிலையால் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம்

கட்டுநாயக்க பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெங்கொக் இல் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமான மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

135 பயணிகள் மற்றும் 9 ஊழியர்களுடன் பயணிக்கும் குறித்த விமானம் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

பின்னர் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி புறப்பட்ட விமானம் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் மத்தள விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம் சீரற்ற காலநிலையால் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம் Reviewed by Vanni Express News on 10/24/2018 11:31:00 PM Rating: 5