ஆபத்தான வலயங்களிலிருந்து வெளியேற மக்களுக்கு அறிவுறுத்தல்

எதிர்வரும் 24 மணிநேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படும் பட்சத்தில் ஆபத்தான வலயத்திலிருந்து வெளியேறுமாறு அந்த வலயத்தில் தங்கியுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, புலத்சிங்கள, அகலவத்த, பதுரலிய, மத்துகம, இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகள், அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவு, காலி மாவட்டத்தின் நெலுவ, தவலம, எல்பிட்டிய, நியாகம, நாகொட, யக்கலமுல்ல, பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகள், அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் ஆபத்தான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு, நிலச்சறுக்கல், பாராங்கற்கள் விழுதல், மரங்கள் முறிந்து வீழ்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெறக்கூடிய பாதைகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பான தகவல்களை 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
ஆபத்தான வலயங்களிலிருந்து வெளியேற மக்களுக்கு அறிவுறுத்தல் ஆபத்தான வலயங்களிலிருந்து வெளியேற மக்களுக்கு அறிவுறுத்தல் Reviewed by Vanni Express News on 10/09/2018 04:01:00 PM Rating: 5