அரேபிய கடல் பிரதேசத்தில் தாழமுக்கம் - நாட்டின் பல பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை

நாட்டின் மேற்குத் திசையாக அரேபிய கடல் பிரதேசத்தில் அதிகரித்துள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நாளைய தினமும் மேலும் அதிகரிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். இரவு வேளையில் மத்திய ஊவா சப்ரகமுவ வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகலாம். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரையான கடும் காற்று வீசலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரேபிய கடல் பிரதேசத்தில் தாழமுக்கம் - நாட்டின் பல பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை அரேபிய கடல் பிரதேசத்தில் தாழமுக்கம் - நாட்டின் பல பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை Reviewed by Vanni Express News on 10/06/2018 10:43:00 PM Rating: 5