மண்சரிவு அபாயம் காரணமாக 27 பேர் வெளியேற்றம்

ஹல்தும்முல்ல, கொஸ்லந்த தோட்டம், கொட்டபெத்ம பகுதியில் உள்ள 6 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

நேற்று (08) குறித்த நபர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இடர் முகாமைத்து மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதி பணிப்பாளர் ஈ.எல்.எம் உதயகுமார தெரிவித்துள்ளார். 

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் கொட்டபெத்ம தேயிலை தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மண்சரிவு அபாயம் காரணமாக 27 பேர் வெளியேற்றம் மண்சரிவு அபாயம் காரணமாக  27 பேர் வெளியேற்றம் Reviewed by Vanni Express News on 10/09/2018 12:52:00 AM Rating: 5