மண்சரிவு அனர்த்தம் போக்குவரத்து இடைநிறுத்தம்

மண்சரிவு அனர்த்தத்தின் காரணமாக ஹட்டன் பொகவந்தலாவை பிரதான வீதியில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வீதியில் நோர்வூட் நியூவெலிகம என்ற இடத்தில் நிலம் தாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இந்த வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நோர்வூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண்சரிவு உள்ள இந்த பகுதியில் 5 வீடுகள் நிலத்தில் தாழ்ந்து வருவதனால் அந்த வீடுகளில் குடியிருந்தோரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மண்சரிவு அனர்த்தம் போக்குவரத்து இடைநிறுத்தம் மண்சரிவு அனர்த்தம் போக்குவரத்து இடைநிறுத்தம் Reviewed by Vanni Express News on 10/13/2018 05:40:00 PM Rating: 5