சில மணித்தியாலங்கள் முடங்கியிருந்த யூடியூப் மீண்டும் வழமைக்கு திரும்பியது

தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக சில மணித்தியாலங்கள் முடங்கியிருந்த பிரபல சமூக வலைதளமான யூடியூப் இணையதளம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. 

உலகம் முழுக்க யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக யூடியூப் இணையதளம் முடங்கியது. 

இதனையடுத்து யூடியூப் இணையதளம் முடங்கியுள்ளதால் அதனை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். 

நீண்ட நேர முயற்சியின் பின்னர் யூடியூப் இணையதளம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சில மணித்தியாலங்கள் முடங்கியிருந்த யூடியூப் மீண்டும் வழமைக்கு திரும்பியது சில மணித்தியாலங்கள் முடங்கியிருந்த யூடியூப் மீண்டும் வழமைக்கு திரும்பியது Reviewed by Vanni Express News on 10/17/2018 05:14:00 PM Rating: 5