அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு - 12 பேர் பலி

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

தாக்குதல் நடந்தபோது 200 பேர் பாரில் இருந்ததாகத் தெரிகிறது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் கொல்லப்பட்டுவிட்டார் என்றும், அது தவிர 11 பேர் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். 

இதில் அதிகாரி ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்ததாக பொலிஸ் தெரிவிக்கிறது. புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 2.30 மணிக்கு இந்த தாக்குதல் நடந்தது. 

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆட்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. தாக்குதல் நடந்தபோது பாரில் கல்லூரி இசை விழா ஒன்று நடைபெற்றுவந்தது. 

தாக்குதலில் ஈடுபட்டவர்கள், துப்பாக்கியோடு புகை கக்கும் கையெறி குண்டுகளை பயன்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு - 12 பேர் பலி அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு - 12 பேர் பலி Reviewed by Vanni Express News on 11/08/2018 05:41:00 PM Rating: 5