மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் பலி

இரத்தினபுரி - கண்டி பிரதான வீதியின் பொரளுகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஹொரண பகுதியில் இருந்து இங்கிரிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றுமொரு மோட்டார் சைக்கிளினை முந்திச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் எதிரில் வந்த கார் ஒன்றுடன் மோதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ளதுடன் அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் பலி மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 11/29/2018 11:32:00 PM Rating: 5