இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து - ஒருவர் பலி - பலர் காயம்

கேகாலை - நெலுந்தெனிய - மொரவக பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 8 மணியளவில் கம்பளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்தொன்றை முந்திச் செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டியொன்று சிறிய ரக வேன் வாகனமொன்றில் ​மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர்கள் வீதியில் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் , பேரூந்தின் சில்லுகள் அவர்கள் மீது ஏறிச்சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வரக்காபொலை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த 39 வயதுடைய  நபர் மற்றும் அவரின் 17 வயதுடைய மகள் விபத்தில் படுகாயமடைந்து கேகாலை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் மோதிய வேன் வாகனம் அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில பேரூந்தின் சாரதியும் , சிறிய ரக வேனின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து - ஒருவர் பலி - பலர் காயம் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து - ஒருவர் பலி - பலர் காயம் Reviewed by Vanni Express News on 11/28/2018 11:51:00 PM Rating: 5