குத்பாவை சுருக்கி, தொழு­கையை நீட்டிக் கொள்­ளு­மாறு ஜம்­ - இய்­யத்துல் உலமா வேண்டுகோள்

-ஐ. ஏ. காதிர் கான் 

குத்பாப் பிர­சங்­கங்­களை சுருக்கி, தொழு­கையை நீட்டிக் கொள்­ளு­மாறு, அகில இலங்கை ஜம்­ - இய்­யத்துல் உலமா சபை, நாட்­டி­லுள்ள அனைத்து ஜும்ஆப் பள்­ளி­வா­சல்­களின் கதீப்­மார்­க­ளையும், நிர்­வா­கிகளையும் கேட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்­ - இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக், இது தொடர்பில் நாட்டின் சகல ஜும்ஆப் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

ஜும்ஆப் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக் கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­களில் நண்பகல் 1.30 மணி­யையும் கடந்து ஜும்ஆப் பிர­சங்­கங்கள் நடை­பெ­று­வ­தாக, உலமா சபையின் கவ­னத்­திற்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

இதனால் ஜும்ஆத் தொழு­கைக்­காக, குறு­கிய நேர விடு­மு­றைகளைப் பெற்­று­வரும் அர­சாங்க மற்றும் தனி­யார்­துறை ஊழி­யர்கள், பல்வேறு சிர­மங்­க­ளுக்­குள்­ளா­கின்­றனர்.

கதீப்­மார்கள் குத்­பாவைச் சுருக்கி, தொழு­கையை நீட்டிக் கொள்­வதே, சன்மார்க்கத்துக்கான சிறந்த அடை­யா­ள­மாகும்.

குத்பாப் பிர­சங்­கங்கள் நீண்ட நேரம் இடம்­பெ­று­வதால், வய­தா­ன­வர்கள் உள்ளிட்ட நோயாளர்­கள் பலரும், பல்­வேறு சிர­மங்­க­ளுக்­குள்­ளா­கின்­றனர்.

இதனைத் தவிர்ப்பதற்காக குத்பாப் பிரசங்கங்களை இயன்றளவு சுருக்கிக் கொள்ளுமாறும், உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக், அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குத்பாவை சுருக்கி, தொழு­கையை நீட்டிக் கொள்­ளு­மாறு ஜம்­ - இய்­யத்துல் உலமா வேண்டுகோள் குத்பாவை சுருக்கி, தொழு­கையை நீட்டிக் கொள்­ளு­மாறு ஜம்­ - இய்­யத்துல் உலமா வேண்டுகோள் Reviewed by Vanni Express News on 11/29/2018 03:35:00 PM Rating: 5