பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உயிரிழப்பதற்கும் வாய்ப்பு - அமைச்சர் மஹிந்த அமரவீர

தற்போது பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உயிரிழப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இந்த நிலமைக்கு சபாநாயகரே முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நேற்று (17) அங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அமைச்சரவையை அல்லது பிரதமரை நியமிக்கவோ அரசாங்கத்தை கலைக்கவோ சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை எனவும் அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கே அதற்கான அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் என்பவர் நடுநிலையானவராகவும் பக்கச்சார்பற்றவராகவும் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் தீர்மானங்களை அவரால் விமர்சிக்க முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உயிரிழப்பதற்கும் வாய்ப்பு - அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உயிரிழப்பதற்கும் வாய்ப்பு - அமைச்சர் மஹிந்த அமரவீர Reviewed by Vanni Express News on 11/18/2018 10:38:00 PM Rating: 5