சபாநாயகர் நடுநிலையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும்

சபாநாயகர் மிகவும் நடுநிலமையான முறையில் செயற்பட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட் இறுதிப் போட்டியை எதிர்ப்பார்த்து இருப்பது போன்று மக்கள் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறக் கூடியவைகளை காண்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் யார் இறுதி வரையில் துடுப்பெடுத்தாடுகின்றார்கள், யார் ஆட்டமிழக்கின்றார்கள் என்பது தொடர்பில் மக்கள் மிகவும் விருப்பத்துடன் எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற வரலாற்றில் நன்மதிப்பை இழந்த முதலாவது சபாநாயகர் கரு ஜயசூரிய எனவும் பாராளுமன்றத்தில் இடம்பெறக் கூடியவைகளுக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது பாராளுமன்றத்தில் நிதானமாக இருக்க வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை எனவும் சபாநாயகரே நிதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் நடுநிலையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும் சபாநாயகர் நடுநிலையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும் Reviewed by Vanni Express News on 11/19/2018 12:52:00 PM Rating: 5